இடம், பொருள், ஆவல்

திரும்பவும் அவரை வாழ்வில் எதிர்கொள்ள நேரிடும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. என் தவறுதான். நான் எத்தனை முறை தொலைபேசி எண்ணை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் மாற்றிய ஒரு சில வாரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நம்பர் மாத்திட்டிங்கன்னு சொல்லவேயில்லியே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிப்பார். ஆனால் மாற்றிய எண்ணை யாரிடமிருந்து பெற்றார் என்பதைச் சொல்லமாட்டார். என் எண்ணைக் கண்டுபிடிப்பதற்காகவே தனியொரு உளவுப் படையை அவர் வைத்திருக்கக்கூடும். நான் அவருக்கு அஞ்சி எண்ணை மாற்றுவதில்லை. இது சர்வ நிச்சயம். … Continue reading இடம், பொருள், ஆவல்